உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

கரூர்: காவிரியில் மணம் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டதாக அரவக்குறி்ச்சி தி.மு.க. எம்எல்.ஏ. கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் அரவக்குறி்ச்சி தி.மு.க. எம்.எல்.‌ஏ. கே.சி.பழனிச்சாமி, இவர் தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் முன்னாள் எம்.பி., இந்நிலையில் இவர் மீது மணல் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டது. மற்றும் ‌மணல் கொள்ளை விவகாரங்கள் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் , போலீசார் எம்.எல்.ஏ.‌ கே.சி.பழனிச்சாமியை கரூர் அருகேயுள்ள மாயனுரில் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ. பழனிச்சாமியை , குளித்தலை கோர்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் பழனிச்சாமியை அடைக்குமாறு நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்