உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறையாக தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.,வுக்கே வெற்றி

முறையாக தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.,வுக்கே வெற்றி

சென்னை:''மூன்று தொகுதிகளிலும், முறை யாக தேர்தல் நடந்தால், தே.மு.தி.க., வெற்றி பெறும்,'' என, தே.மு.தி.க., மகளிரணி செயலர் பிரேமலதா கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ஓட்டுக்கு மக்களை விலை கொடுத்து வாங்கும் அவமான செயல், தமிழகத்தில் தான் நடந்து வருகிறது. அதன்படி பார்த்தால், தற்போது திருப்பரங்குன்றத்தில்மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் நடப்பது மறு தேர்தல் தான். அங்கு பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்ததால் தான், தேர்தல் ரத்தானது. தேர்தல் கமிஷனும், நீதிமன்றமும் முறையாக தேர்தலைநடத்தினால், தே.மு.தி.க., வெற்றி பெறும். நான், 17ம் தேதி வரை, பிரசாரம் செய்ய உள்ளேன். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரம் பற்றி, கட்சி தலைமையிடம் இருந்து அறிவிப்பு வரும். வைகோ, தினம் தினம் ஒரு கருத்து கூறுவார்; ரியாக்ட் செய்வார். அதற்கு நாங்கள் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ