உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்

ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்

புதுடில்லி: 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்களை, கோர்ட்டில், சி.பி.ஐ., தாக்கல் செய்யவில்லை. எனவே, இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, நேற்று கோர்ட்டில் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரமோட்டர் ஷாகித் பல்வா சார்பில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, அப்போதைய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வாதியும், முக்கிய விவாதம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான அனைத்து விதமான ஆவணங்களையும், சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை உட்பட, சி.பி.ஐ., தாக்கல் செய்த பல ஆவணங்களில் குறிப்பிட்ட சில விஷயங்கள் இடம் பெறவில்லை. 2007 டிசம்பர் 26ல், பிரதமருக்கு, அப்போதைய அமைச்சர் ராஜா எழுதிய கடிதம் குறித்த விஷயத்தை, அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த கோர்ட்டில் வாதாடியபோது, தெரிவிக்கவில்லை. இதை ஏன் தெரிவிக்கவில்லை என்பதையும், அவர் கோர்ட்டில் விளக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ