உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மா விளைச்சலை அதிகரிக்க இலக்கு

மா விளைச்சலை அதிகரிக்க இலக்கு

ராமநாதபுரம் :தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் அடர் நடவு முறையில் மாங்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இவை தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது. ஐந்து மீட்டருக்கு ஒரு கன்று வீதம், ஒரு எக்டேரில் 400 கன்றுகள் நடப்படும். எக்டேருக்கு 24 ஆயிரம் ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது.கடந்த முறை பயிரிட்ட பரப்பை காட்டிலும், இந்த முறை மூன்று மடங்கு விளைச்சலை பெருக்க, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மா விவசாயிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நடவு முறை குறித்து விளக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை