உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மேயர் தி.மு.க.வேட்பாளர் மனு தாக்கல்

மதுரை மேயர் தி.மு.க.வேட்பாளர் மனு தாக்கல்

மதுரை: உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் மதுரை மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் பாக்கியநாதன், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நகர செயலர் தளபதி, புறநகர் செயலர் மூர்த்தி, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அழகிரி கூறியதாவது: நேற்று நடந்த வேட்பாளர் வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது தெரியவி்ல்லை. மேலும் நகரின் பல இடங்களில் ஜெ. மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் ‌வரையப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் அழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் தேர்தல் அதிகாரிகள் அழிக்கவில்லையெனில் நாங்கள் அழிப்போம் என எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை