உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால், அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில், நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலை, தலைமை தபால் நிலையத்தில் உள்ள தலைமை தபால் துறைத் தலைவர் அறைக்கு, நேற்று மதியம் கடிதம் ஒன்று வந்தது. அனுப்புனர் முகவரி எதுவும் குறிப்பிடாமல் வந்த கடிதத்தில், 'நாளை (30.09.11) மதியம் 1 மணிக்கு குண்டு வெடிக்கும்; அதில் ஊழியர்கள் யாரும் தப்பிக்க முடியாது' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தபால் துறை அதிகாரிகள், சிந்தாதரிபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர், மோப்ப நாய், 'அஸ்ட்ரோ'வுடன் வந்து, தபால் நிலைய அலுவலகம் முழுவதும், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், அது வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து, தபால் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை