மேலும் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோவில்கள் -19
04-Dec-2024
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் சேதுபதி மன்னர்கள். இவர்களில் உடையப்ப சேதுபதி மன்னர் கனவில் தோன்றிய சாஸ்தா, 'மேற்கு நோக்கி எனக்கு கோயில் கட்டு' என்றார். இதனால் சுவாமிக்கு 'கூறி சார்ந்த அய்யனார்' என்ற பெயர் உண்டானது. பின் அது மருவி 'கூரி சாத்த அய்யனார்' என பெயர் பெற்றார். அரண்மனை கோட்டைக்கு வெளியே கோயில் அமைக்கப்பட்டது. போருக்கு செல்லும் முன் வீரர்கள் இவரை வணங்கிய பின்னரே செல்வர். யானை, குதிரை பரிவாரத்துடன் அருள்பாலிக்கும் அய்யனார் கேட்டவருக்கு கேட்ட வரத்தை தருகிறார். மகா சிவராத்திரி, ஆவணியில் புரவி எடுப்பு விழா நடக்கிறது. ராக்காச்சியம்மன், கருப்பண்ண சாமி உட்பட 21 தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ., நேரம்: காலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94424 73324அருகிலுள்ள தலம்: வழிவிடும் முருகன் கோயில் 4 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 9:00 மணி தொடர்புக்கு: 98948 87503
04-Dec-2024