உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் அடித்ததில் மாணவர் மரணம்

ஆசிரியர் அடித்ததில் மாணவர் மரணம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆசிரியர் அடித்ததில் மாணவர் மரணமடைந்ததால், சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருபவர் பிரபாகரன் (17). இவர் உளுந்தூர் பேட்டையை அடுத்த பூ. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று காலை ஆசிரியர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பிரபாகரன் சரியாக பதிலளிக்காததால், ஆசிரியர் குணசேகரன், பிரபாகரனை அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த பிரபாகரனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி மாணவர் மரணமடைந்தார். இதையடுத்து, சக மாணவர்கள் திருச்சி சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை