மேலும் செய்திகள்
பராசக்தி பட விவகாரம்; ஆங்கில ஊடக விவாதத்தில் அசிங்கப்பட்டது திமுக
5 hour(s) ago | 54
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்
6 hour(s) ago
தவெக 3வது ஆண்டு தொடக்க விழாவில் நடனமாடிய விஜய்; கட்சியினர் ஆரவாரம்
7 hour(s) ago | 11
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பர பவனி இன்றிரவு நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் சிறப்புபெற்ற இந்த பேராலய 429வது ஆண்டு திருவிழா ஜூலை 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபம், சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி இன்றிரவு நடந்தது. இரவு 7 .15 மணிக்கு பேராலயத்திலிருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்ட மாதா, செயின்ட் பீட்டர் ஆலயத்தெரு, வி.இ., ரோடு, தெற்கு ராஜா தெரு, சின்னக்கோயில், ஜி.சி., ரோடு, தெற்கு பீச்ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
5 hour(s) ago | 54
6 hour(s) ago
7 hour(s) ago | 11