மேலும் செய்திகள்
வெள்ளி ஒரு கிலோ ரூ.10,000 அதிகரிப்பு
20 minutes ago
ஜனவரியில் புதிய டி.ஜி.பி.,: சீமா அகர்வாலுக்கு வாய்ப்பு
26 minutes ago
சென்னை: ஏரியை ஆக்கிரமித்து கட்டியதாக எம்.ஜி.ஆர்., பல்கலை.,யின் சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. சென்னையையடுத்த மதுரவாயிலில் ஏரியில் 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்தன. இந்த ஏரியில் எம்.ஜிஆர்., பல்கலைகழகம் 43 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டி கோவில், ஏ.டி.எம்., அமைத்திருந்தது. இதேபோல் மற்றவர்களும் ஏரியை ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் எம்.ஜி.ஆர்., பல்கலைகழகம் ஆக்கிரமித்திருந்தவற்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றவர்களும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்பு பணி நடக்கப்போவதை முன்னரே தெரிந்து கொண்ட பல்கலைகழக நிர்வாகம் கடந்த 18ம் தேதி முதல் பல்கலைகழக மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
20 minutes ago
26 minutes ago