உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலையில் உயர்கல்வி ஆலோசனைக் கூட்டம்

பல்கலையில் உயர்கல்வி ஆலோசனைக் கூட்டம்

மதுரை: உயர்கல்வியில் புதிய கொள்கைகள் வகுப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம், மதுரை காமராஜ் பல்கலையில் நாளை நடக்கிறது. தமிழக அரசு 12 வது ஐந்தாண்டு திட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதில் உயர்கல்வியில் புதிய கொள்கை, வளர்ச்சிக்கு வித்திடுதல், திட்டங்களை சரியாக செயல்படுத்துதல், கண்காணித்தல் இடம்பெற உள்ளது. இதுபற்றிய மண்டல ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மதுரை காமராஜ் பல்கலை உயிரியல்துறை சி.வி.ஆர்., அரங்கில் நடக்கிறது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் தங்கராஜ் கலந்துரையாடுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் gmail.com இமெயில் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என பல்கலை தனி அலுவலர் ஜெயராமன், பதிவாளர் (பொறுப்பு) ராஜியக்கொடி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்