உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ:ஸ்டாலின் ஆதங்கம்

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ:ஸ்டாலின் ஆதங்கம்

மதுரை: ''அ.தி.மு.க.,ஆட்சியில் இன்னும் போகப்போக என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை,'' என தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் கூறினார். பரமக்குடி கலவரத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 17 பேருக்கு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று இரவு 9.15 மணிக்கு ஆறுதல் கூறினர். அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

ஸ்டாலின் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என தற்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். அது மக்களை மதிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியாக இருந்தது. தற்போது, அ.தி.மு.க.,வின் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. பரமக்குடி கலவரத்தில் காயமுற்ற அப்பாவிகளுக்கும், மறியலுக்கும் சம்பந்தமில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தலை சேர்ந்த கணேசனும் ஒருவர். இவரது மகன் குணசேகரனுக்கு இன்று (நேற்று) நடந்த திருமணத்திற்காக பரமக்குடிக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவர், பலியாகிவிட்டார்.அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஆட்சியில் இன்னும் போகப்போக, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோதெரியவில்லை, என்றார். பின்னர், அவர் சென்னை புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி