மேலும் செய்திகள்
காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்
6 hour(s) ago | 22
காங்கிரசை கூட்டணியில் சேர்க்கலாமா; சீமானிடம் ஆலோசித்த விஜய்
9 hour(s) ago | 11
கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார்; அண்ணாமலை பேட்டி
10 hour(s) ago | 11
சென்னை:சென்னை அரசு அருங்காட்சியகம் சார்பில், 'இவ்வாரக் காட்சிப்பொருள்' என்ற தலைப்பில், இன்று துவங்கி வரும் 25ம் தேதி வரை, 'பழங்கால காசுகள் எண்ணும் மரப்பலகை,' எனும் காட்சிப் பொருள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.தென்னிந்தியாவில், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தின்போது, மிகச் சிறிய வடிவம் கொண்ட பொற்காசுகள் புழக்கத்தில் இருந்தன. தென்னிந்தியப் பணம் என அழைக்கப்பட்ட இந்த பொற்காசுகளில், கொள்ளுக் காசு, பொட்டுக் காசு, துவரம் பருப்புக் காசு, மிளகாய் விதைக் காசு என, பல வகைகள் உண்டு.
திருவனந்தபுரம், கொச்சி மற்றும் குமரி மாவட்டம் வரையிலும், 'தென்னிந்தியப் பணம்' பயன்படுத்தப்பட்டது.சிறிய வடிவத்தில் உள்ளதால், இந்த பொற்காசுகளை எண்ணுவதில் சிக்கல் இருந்தது. இதை தீர்க்கும் வகையில், 300க்கும் மேற்பட்ட குழிகள் கொண்ட, நீள் சதுர மரப்பலகைகள் பயன்படுத்தப்பட்டன. செவ்வக வடிவத்திலான இந்த பலகைகளில், செங்குத்தாக 19 வரிசைகள் மற்றும் பக்கவாட்டில் 18 வரிசைகள் எனும் வீதமாக, 398 குழிகளை ஏற்படுத்தி, அவற்றின் மீது காசுகள் பரப்பப்பட்டு எண்ணப்பட்டன.பழங்காலத் தமிழரின் வளமை மற்றும் கலைத் திறனை, ஒருங்கே எடுத்துக் காட்டும் வகையில் உள்ள இந்த மரப்பலகையை, பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்.
6 hour(s) ago | 22
9 hour(s) ago | 11
10 hour(s) ago | 11