உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச ‌சேலை: ஒதுக்கித்தள்ளிய கிராமமக்கள்

இலவச ‌சேலை: ஒதுக்கித்தள்ளிய கிராமமக்கள்

உடுமலை: உடுமலை அருகே வாக்காளர்களுக்கு வழங்கிய இலவச ‌சேலையை ஒதுக்கித் தள்ளினர்.உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்தது மலையாண்டி கவுண்டனூர் கிராமம் . இக்கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் நேற்று இரவு ஒவ்வொரு வீட்டின் முன்னால் சேலைகள் இருப்பதை கிராம மக்கள் கண்டனர். விரைவில் நடைபறெ உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியில் கட்சியினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு்ளனர் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் வீட்டின் முன்னர் இருந்த சேலைகள் தங்களுக்கு தே‌வையில்லை என ஒதுக்கிதள்ளினர். இச்சம்பவம் அப்பகுதியி்ல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ