உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேன் கவிழ்ந்து 30பேர் காயம்

வேன் கவிழ்ந்து 30பேர் காயம்

கமுதி :கமுதியில் வேன் கவிழ்ந்ததில் 20 பெண்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.கமுதி அருகே அம்மன்பட்டி கிராமத்தைச்சேர்ந்த லட்சுமி, பேச்சி, பூச்சி, ஜெயராம், அங்கப்பன், பசுபதி உட்பட 45க்கும் மேற்பட்டோர் வேனில் மிகுந்த நெரிசலுடனும் மேற்கூரையிலும் பயணம் செய்தனர். கமுதி வழிவிட்ட அய்யனார் கோயில் அருகே வந்த போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டது. இதில் 30 பேர் காயமடைந்தனர். கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் சிவா உட்பட 15க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை