உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., பற்றி புகார்; மன்னிப்பு கேட்டார் சீனிவாசன்!

ஜி.எஸ்.டி., பற்றி புகார்; மன்னிப்பு கேட்டார் சீனிவாசன்!

கோவை: கோவையில் நேற்று நடந்த கூட்டத்தில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பங்கேற்றார்.இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி வரி என்று நிதி அமைச்சர் நிர்மலாவிடம் புகார் தெரிவித்தார்பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை; அதை கிரீமுடன் சேர்த்து சாப்பிடும் போது ஜிஎஸ்டி போடுவதாகவும், கூறினார்.அவர் கிண்டல் தொனியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனதுஇந்நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். தான் எந்த கட்சியையும் சேராதவன் என்று தன் நிலை விளக்கமும் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ramani
செப் 13, 2024 17:37

தமிழக முதல்வரிடமும் இதே கேலியும் கிண்டலுமாக கேள்வி எழுப்புவாரா அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்?


madhumohan
செப் 13, 2024 14:48

பயப்படாதீர்கள் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் ......


Muralidharan S
செப் 13, 2024 13:52

கோவை அன்னபூர்ணா அதிபர் ஒன்றும் தவறாக பேசிவிடவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. பாஜகவிற்கு உள்ளே இருந்து கொண்டு, பாஜகவிற்கு / அண்ணாமலை அவர்களுக்கு அழிவை தேடி தரும் சில சீனியர்கள் வற்புறுத்தலால், ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டு இருப்பார். ஆனால், அதன் பிறகு, மத்திய நிதி அமைச்சர் அவர்கள் மிகவும் பேசிய பேச்சு அவர் மீது இருந்த மரியாதையை குறைத்து விட்டது. பதவி இருக்கும் இடத்தில் சிறிது பணிவும் இருக்க வேண்டும். மக்கள் ஒட்டு போடாமல் இவர் நேரிடையாக அமைச்சர் ஆகி உள்ளதால் இவர்க்கு மக்கள் படும் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பு இல்லை. பாஜக அமைச்சர் ஒருவர் இப்படி தமிழகத்தில் அதுவும் தமிழக நேர்மையானா, மதிப்பு மிகுந்த அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் போன்ற தொழில் அதிபர்களிடம் இப்படி நடந்து கொண்டு உள்ளது தமிழகத்தில் பாஜகவிற்கு மேலும் இழப்பையே ஏற்படுத்தும்.


அஸ்வின்
செப் 13, 2024 03:17

எதற்கு மன்னிப்பு தேவை இல்லை