மனைவி புகாரில்போலீஸ்காரர் கைது
திருநெல்வேலி;வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக, மனைவி கொடுத்த புகாரின்படி, போலீஸ்காரரான கணவர் கைது செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்தவர் கண்ணன்,45. போலீஸ்காரர். திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர், பணகுடியில் போலீஸ்காரராக பணியாற்றிய போது, ஒரு வழக்கில் விசாரணைக்கு வந்த வடக்கன்குளத்தைச் சேர்ந்த இசக்கியம்மாளுடன்,35, பழக்கம் ஏற்பட்டது.
இசக்கியம்மாளின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், போலீஸ்காரர் இசக்கியம்மாள் வீடே கதி என கிடந்தார்.இதுகுறித்து, கற்பகம் போலீசில் புகார் கொடுத்ததால், கண்ணன் சங்கரன்கோவில் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், இசக்கியம்மாளுடன் தொடர்பை விடவில்லை.நேற்று முன்தினம் இரவில், இசக்கியம்மாள் வீட்டில் கண்ணன் இருந்தபோது, கற்பகம் தமது மகள்களுடன் சென்று, கணவனை மீட்க முயற்சித்தார். அப்போது, தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் கண்ணன், கற்பகத்தை கொலை செய்ய முயற்சித்தார்.கற்பகத்தின் புகாரின்படி, போலீஸ்காரர் கண்ணன், இசக்கியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.