உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் செம்பில் "சத்தியம் வாக்காளர்களிடம் உறுதி : பிரசாரத்தில் புதுயுக்தி

பால் செம்பில் "சத்தியம் வாக்காளர்களிடம் உறுதி : பிரசாரத்தில் புதுயுக்தி

தேனி : தேனி மாவட்டத்தில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் பால் செம்பில் சத்தியம் கேட்கின்றனர். தேனி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் மும்முரமாகியுள்ளனர். ஒரே வாக்காளர் பல வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பதாக உறுதி அளித்து வருகின்றனர். இதனால் சந்தேகமடையும் வேட்பாளர்கள் பால் செம்புடன் வாக்காளர் வீடுகளுக்கு சென்று தனக்கு ஓட்டு அளிக்குமாறு 'சத்தியம்' கேட்கின்றனர்.

தேனியில் இவ்வித பிரசாரம் அதிகரித்து வருகிறது. வேட்பாளர்களின் இந்த நடவடிக்கை வாக்காளர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேனி நகராட்சியில் 23,31 போன்ற வார்டுகளில் இத்தகைய வேட்பாளர்களை வாக்கு சேகரிக்க வேண்டாம் என பொது மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ