மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
3 hour(s) ago | 1
மதுரை:மதுரையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மீறும் வேட்பாளர்கள், கட்சியினர் மீது மட்டும் இதுவரை வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்சித் தலைவர்கள் மீதும் 'கை' வைக்க துவங்கியுள்ளனர். இது கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சட்டசபை தேர்தல் போஸ்டர்கள் கூட கிழிப்படாமல் இருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கியது. மதுரையில் சட்டசபை தேர்தலை ஊர்த் திருவிழாவாக கொண்டாடிய கட்சிகள், இத் தேர்தலை வீட்டு விழாவாக கருதி தீவிரமாக பிரசார வேட்டையில் ஈடுபடுகின்றனர்.இவர்களுக்கு உற்சாகம் கொடுக்க, கட்சித் தலைவர்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். பொதுவாக, வேட்பாளருடன் தலைவரோ, வி.ஐ.பி.,க்களோ வரும்போது பின்னால் மூன்று கார்கள் மட்டும் வரவேண்டும் என்பது விதி. ஆனால் சாரை சாரையாக நிர்வாகிகள் கார்களில் பின்தொடர்கின்றனர். இதுதொடர்பாக, அந்த பகுதி வார்டு செயலாளர், வேட்பாளர் மீது மட்டுமே இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இத்தேர்தலில் தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இரு நாட்களுக்கு முன், தேர்தல் விதிமுறையை மீறி கூடுதல் வாகனங்களில் வந்ததாக தே.மு.தி.க., மேயர் வேட்பாளர் கவியரசுக்கு பிரசாரம் செய்த கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ம.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரசேதுபதிக்கு பிரசாரம் செய்த பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நகர் செயலாளர் பூமிநாதன் ஆகியோர் அதிக செலவு செய்தது, அதிக வாகனங்களில் வந்தது என சுப்பிரமணியபுரம், திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. தி.மு.க., மேயர் வேட்பாளர் பாக்யநாதனும் இதுபோன்று விதிமுறை மீறியதாக திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆளுங்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தால், தேர்தலுக்கு பின் அவை கிடப்பில் போடப்படும். இது எழுதப்படாத 'விதி'. அதேசமயம், தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., என எதிர்கட்சிகள் மீது பாயும் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல், கைது என நடவடிக்கை வரும் காலத்தில் நிச்சயம் இருக்கும். இதை எண்ணி இப்போதே கலக்கத்தில் உள்ளனர் தொண்டர்கள்.
2 hour(s) ago
3 hour(s) ago | 1