உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 61,000 ரேஷன் கார்டு தான் ஓராண்டில் வினியோகம்

61,000 ரேஷன் கார்டு தான் ஓராண்டில் வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றை வாங்க ரேஷன் கார்டு அவசியம்.ஆண்டுதோறும் சராசரியாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புது கார்டுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 - 23ல், 2.21 லட்சம் ரேஷன் கார்டுகளும்; அதற்கு முந்தைய ஆண்டில், 7.50 லட்சம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2023 செப்டம்பரில் துவக்கியது. இதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதனால், பலரும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். அந்தாண்டு ஜூலை முதல் பயனாளிகளுக்கு புதிய கார்டு வழங்கப்படவில்லை. எனவே, 2023 - 24ல், 61,047 ரேஷன் கார்டுகள் தான் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், புதிய கார்டு கேட்டு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mohamed Eshan
ஜூன் 30, 2024 00:44

நான் புதிதாக ரேஷன் கார்டு பதிவு செய்திருந்தேன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது இன்னும் எனக்கு ரேஷன் கார்டு வரவில்லை


Mohamed Eshan
ஜூன் 30, 2024 00:42

கடந்த ஆண்டு நான் புதிதாக ரேஷன் கார்டு பதிவு செய்திருந்தேன் இன்னும் ரேஷன் கார்டு எண்ணுக்கு வரவில்லை ரேஷன் ஆபீஸில் சென்று கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள் தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு தருகிறார்கள் அதுக்காகவே தான் உங்களுடைய ரேஷன் கார்டு தாமதமாக இருக்கிறது அது உங்களுக்கு ரேஷன் கார்டு தந்துவிட்டால் மாதம் உங்களுக்கும் ஆயிரம் ரூபாய் தமிழரசி தரவேண்டும் என்று அது நிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதுதானா திராவிடம் மடல்


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:31

ரேஷனுக்கே ரேஷனா சபாஷ் பேஸ் பேஸ் ரோம்ப நன்னா இருக்கு வொய்


Palanisamy Sekar
ஜூன் 29, 2024 03:44

வீட்டில் இப்போதெல்லாம் யாரும் சமைப்பதே இல்லை. பலரும் வெளியே உணவை தருவித்து பொழுதை ஜாலியாக போக்குவதால் இந்த ரேஷன் கார்டு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் இப்போதெல்லாம் அதிகமாக யாருமே கிடையாது. நாடு மிக வேகமாக முன்னேற்றம் கண்டுவிட்டது. ரேஷன் பொருட்களை வாங்கி வெளியே விற்பதையே சிலர் தொழிலாக செய்வதால் ரேஷன் கடைகளில் விற்பனை நடப்பதாக உள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை