உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,500 : காஷ்மீர் தேர்தல் அறிக்கையில் காங்., வாக்குறுதி

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,500 : காஷ்மீர் தேர்தல் அறிக்கையில் காங்., வாக்குறுதி

ஸ்ரீநகர்: கிலோ ஆப்பிளுக்கு குறைபட்ச ஆதரவு விலை ரூ. 72, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3.500 உதவி தொகை என காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிக்கையை காங். வெளியிட்டது.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு செப். 18, செப்.25. அக்.01 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்., தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநில காங். தலைவர் பவன் கேரா இன்று ஸ்ரீநகரில் கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை விவரம்:* நிலமற்ற, குத்தகைதாரர் மற்றும் நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கூடுதல் நிவாரணம். * ரூ. 2,500 கோடியில் மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டம் அமைக்கப்படும். * வேலையில்லா இளைஞர்கள் தகுதி அடிப்படையில் மாதந்தோறும் ரூ. 3,500 வழங்கப்படும்.* ஆட்சிக்கு வந்த 30 நாட்களில் ஒரு லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். * இயற்கை பேரிடர்களுக்கு எதிரான அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு மற்றும் ஒரு கிலோ ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 72 வழங்கப்படும். என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன.இது குறித்து காங். தலைவர் பவன் கேரா கூறியது, 10 ஆண்டுகளாக தேர்தலை சந்திக்காமல் காஷ்மீர் இதயம் காயமடைந்துள்ளது. அந்த காயங்களை குணப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் சிறுபான்மை ஆணையம் அமைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
செப் 17, 2024 19:24

எலக்‌ஷனுக்கு முன்னாடி ஒரு பத்து பேருக்காவது கைக்காசைப் போட்டு குடுக்கலாமே... ஓ.. சுப்ரீம் கோர்ட் அதை லஞ்சம்னு சொல்லிக்குட்டு பாய்ஞ்சு வந்துருமோ. ஜெயிச்சதுக்கப்புறம் இதில் நாங்க தலையிட முடியாதுன்னு பெருந்தன்மையா சொல்லிடுவாங்க. சூப்பர் நாடுலே இது.


அப்பாவி
செப் 17, 2024 19:21

அடப் போங்கப்பா.... பாஞ்சி லட்சம் போடற அளவுக்கு கருப்பு பணம் கொண்டாருவோம்னு சொன்னவங்களே ஒண்ணும் கிழிக்கலை. 3500 ரூவா வெறும் பிசாத்து.


அப்பாவி
செப் 17, 2024 19:08

தேஷ்பக்தாள்ஸ் கட்சி எவ்ளோ. குடுக்கறாங்கோ? சொல்லுங்கோ.


S.Murali
செப் 17, 2024 14:15

வாக்குறுதி THANEERIL


thyagarajan
செப் 17, 2024 09:27

சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்க்க கூடாது. இது போல் இலவசங்கள் தருவதாக கூறும் வேட்பாளர்களை உடனடியாக நீக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது


Rajarajan
செப் 17, 2024 08:32

ஆகமொத்தம், இந்தியாவில் இருக்கற எல்லா கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு, உங்க சுயநல அரசியலுக்காக, கஜானாவை தூர் வார்ரதுனு முடிவு பண்ணிடீங்க. இதுவே உங்க வீட்டு கஜானாவா இருந்தா, ஒரு சல்லி காசு வெளியே எடுத்து விடுவீர்களா ?? பொதுமக்களின் வரிப்பணம் தானே, யாரும் கேக்க மாட்டாங்கன்னு தைரியம் தானே. இதுக்கு ஒரு பொதுநல வழக்கு யாராச்சும் சீக்கிரம் தாக்கல் பண்ணுங்கப்பா. தனி நபர் நாங்க தான் பாதுகாப்பு இல்லாததால, பண்ண முடியல. இந்த பகல் கொள்ளைக்கு யாராச்சும் ஒரு புண்ணியவான், பூனைக்கு மணி கட்ட எப்போ வருவாரோ ??


Lion Drsekar
செப் 17, 2024 07:27

இதற்கெல்லாம் தேர்தல் கமிஷன் ஒரு முற்று உள்ளி வைக்கவேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தடுக்கவேண்டும், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் கதையாகிவிட்டது, மக்கள் வரிகட்டுவது நாட்டின் பொருளாதார அழற்சிக்கு ஆனால் இங்கு நடப்பதோ, ஒரு ஒற்றும் சம்பள உயர்வு, இதுபோன்ற இலவசம், மக்களுக்கு சேவைசெய்ய வந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கில் சம்பளம், பென்சன் , மொத்தத்தில் மக்கள் ஒரு உரம் வரிகட்டிக்கொண்டு , எல்லா நிலைகளிலும் லஞ்சமும் கொடுத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டு இருக்கின்றனர், இவர்கள் என்னவோ இவர்கள் சொந்த பணத்தை கொடுப்பதுபோல் தினம் தினம் ஒவ்வொரு நிலைகளிலும் வரிகட்டுபவர்களுக்கு அடிமேல் அடி கொடுத்து , தான் வாழ நாட்டை சீரழிப்பதை யார்தான் தடுக்கப்போகிறார்கள், இதற்க்கு பதிலாக சுய வேலைவாய்ப்பு அளிக்கலாம், வந்தே மாதரம்


Sridhar
செப் 17, 2024 06:27

Good decision. They can use it to buy more guns and to collect more stones. Great job by Congress


Duruvesan
செப் 17, 2024 05:41

ராவுள் உன் வீட்டு பணம் இல்லை, சொல்றது சொல்றே ஒரு 500000 சொல்லலாம் இல்ல, ஓட்டு பிச்சிக்கும்


Kasimani Baskaran
செப் 17, 2024 05:38

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பல இன்று திவாலாகும் நிலையில் இருக்கிறது. இருந்தும் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இன்னும் அதை கொடுப்பேன், இதைக்கொடுப்பேன் என்று உருட்டித்திரிகிறார்கள். தீம்கா ஏன் காஷ்மீரில் போட்டியிடவில்லை என்பதை உடன்பிறப்புக்கள் விளக்கினார்கள் என்றால் நன்றாக இருக்கும்.


பாமரன்
செப் 17, 2024 10:20

நான் சொல்லலை... காசி பெரிய அறிவுவாளின்னு... அடுத்ததா டீம்கா ஏன் அமெரிக்க தேர்தலில் நிக்கலன்னு கேட்பாப்ல... உடன்பருப்புங்க நல்லா பதில் சொல்வாய்ங்க... ஆனால் கட்டிங் ஆகிடும்... பார்ப்போம்...


முக்கிய வீடியோ