வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அமைத்து பல ஆண்டுகள் பிறகு மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கிளம்பாக்கம் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் என அறிவித்துவிட்டு ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்குக்கூட தேவையான கட்டமைப்புகள் இல்லாமல் அவர்கள் நீதிமன்றம்வரைசென்று இடைக்கால தீர்வுகாண வேண்டியதாயிற்று. அவசரகதியில் திறப்புவிழா செய்து மூன்று ஆண்டுகள் ஆனபிறகுதான் மெட்ரோ ரயில் இணைக்க திட்டம் தயாரித்துள்ளார்கள். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தயாரித்தபிறகு அதற்கு மத்திய அரசின் ஒப்புதல்பெற தேவையான மாற்று திட்டங்களுடன் அறிக்கையை முழுமையாக தயாரிக்காமல் மத்திய அரசை குறைகூறிக்கொண்டிருந்தார்கள். அதுபோல் இல்லாமல் ஒப்புதல் பெற்று, ஒப்பந்தம் கூறி, பணிகள் துவங்கி முழுமையாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தை செங்கல்பட்டுக்கு மாற்றவேண்டியிருக்கும். பிறகு என்ன மீண்டும் ஆய்வு, திட்ட அறிக்கை போன்றவற்றை தொடங்கவேண்டியத்துதான். ஆகமொத்தத்தில் மக்கள் நலனுக்காகவோ சௌகர்யங்களுக்காகவோ திட்டங்கள் இல்லை
மத்திய மாநில அரசுகள் வேலை செய்யும் லட்சனத்தின் அடையாளம் இது... முதலில் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக கொண்டு வந்த திட்டம். அப்போதே மத்திய அரசுக்கு ரயில் நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ பற்றிய தேவைகள் பற்றி தெரிவித்த நியூஸ் இருந்தது. வழக்கம் போல யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... இந்த மெட்ரோ திட்டம் கூட 2018ல் ப்ளான் பண்ணி இன்னும் ரோஜனையில் மட்டுமே இருக்கு... இதே வேகத்தில் போனால் திட்டம் வரும் அதாவது 2047 விக்கி பாரத்தோ என்னவோ ஜி அன் கோ சொல்வாங்களே அப்ப தான்... கரெக்டா அந்த நேரத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடம் மாறும் அல்லது தேவையே இல்லாமல் போயிருக்கும்... அப்புறம் என்ன சென்னை மெட்ரோவில் தற்போது பயனம் செய்யும்போது CMBT அப்பிடின்னு ஒரு டேஷன் வரும் போது புதிய பயணி இது என்னன்னு கேட்டா ...அதுவா ஒரு காலத்தில் ஒலகத்தில் பெரிய பஷ்ஷுஇஷ்டாண்டு இருந்துச்சாம்னு இப்ப சொல்றதை கிளாம்பாக்கத்துக்கும் சொல்வோம்.... இப்போதைக்கு சம்பந்தமில்லாமல் டீம்கா ஒயிக ஸ்வாஹா அப்பிடின்னு சொல்லி முடிப்போம்...
அவசர அவசரமாக கடைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேருந்து நிலயத்தையே வெளிமாநிலத்துக்கு கொண்டு சென்றது போல கொண்டு போனார்கள். இன்றுதான் மெட்ரோ வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. அணைத்து திராவிட மத அரசுகளும் செய்யாத கெடுதல்களைக்கூட இவர்கள் செய்கிறார்கள்.