| ADDED : ஆக 05, 2024 09:38 PM
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறதென்றால், உயர் போலீஸ் அதிகாரிகள் பலரை, அடிக்கடி இடமாற்றம் செய்வது ஏன்?ஈரோட்டில் இருந்து, திருச்செங்கோடு, நாமக்கல் வழியாக, அரியலுார், பெரம்பலுாருக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படவில்லை. உடனே இது குறித்து விமசிக்கின்றனர். உண்மையில் திட்டத்தை செயல்படுத்த ஐந்து இடங்களில் ஆறு குறுக்கிடுகிறது. அந்த குறுக்கீட்டை சரிபடுத்தி, திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பு தேவை. தமிழகத்தை மூன்று மாநிலமாக பிரித்தால், தலா 15,000 கோடி ரூபாய் வீதம், 45,000 கோடி ரூபாயை, நிதியாக ஒதுக்க தயாராக இருக்கிறோம். தமிழக அரசு திட்டங்களில் 90 சதவீதம் திருடப்படுகிறது. மீதமிருக்கும் 10 சதவீதத்தையாவது தேசத்துக்காக தி.மு.க.,வினரும், முதல்வரும் விட்டு வைக்க வேண்டும். ராமலிங்கம், துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,