உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு: கடல்சார் பல்கலைக்கு நோட்டீஸ்

நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு: கடல்சார் பல்கலைக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடல்சார் பல்கலை நடத்திய நுழைவு தேர்வை எதிர்த்த வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் சார்பில், அவரது தந்தை சரவணன் தாக்கல் செய்த மனு:மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், கடல்சார் படிப்பில் சேர, என் மகன் விரும்பினான். நுழைவு தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த ஏப்ரலில், ஆங்கில பத்திரிகையில் இந்திய கடல்சார் பல்கலை வெளியிட்டது.அந்த விளம்பரம், தெளிவில்லாமல் இருந்தது. வெளியிடப்பட்ட விளம்பரம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்குமா அல்லது பல்கலைக்கு மட்டுமா என்பதில் தெளிவில்லை.இந்தியா முழுதும், கடல்சார் படிப்புகளை நடத்தும் 160 கல்வி நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், தமிழகத்தில் மட்டும் 15 உள்ளன. அனைத்து கல்லுாரிகளையும் சேர்த்தால், 7,000 இடங்கள் வரும்; தமிழகத்தில் மட்டும் 3,000 இடங்கள் உள்ளன. கடந்த மாதம் 8ல், நுழைவு தேர்வு நடந்தது.நுழைவு தேர்வை கணினி வாயிலாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு, கணினி பற்றிய பரிச்சயம் இருக்காது. விளம்பரம் வெளியிட்டது முதல் வரிசைப்பட்டியல் வெளியானது வரை, எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை; 47,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில், 14,000 பேருக்கு 'ரேங்க்' வழங்கப்பட்டுள்ளது.தேர்வு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. நுழைவு தேர்வை, கடல்சார் பல்கலை நேரடியாக நடத்தகவில்லை. தனியார் ஏஜன்சி வாயிலாக நடத்தியது.தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் நிரம்பவில்லை என்றால், கல்லுாரி நிர்வாகம் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.அதேபோல, தேர்வு எழுதியவர்களை, காலியிடங்களில் நிர்வாகம் நிரப்பிக் கொள்ளும் வகையில், மத்திய அரசு தீர்வு அளிக்க வேண்டும்.எனவே, முறையான வழிமுறைகள் வகுக்கப்படாததால், பி.டெக்., மெரைன் இன்ஜினியரிங்; பி.எஸ்.சி., நாட்டிக்கல் சயின்ஸ்; டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜரானார்.மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, கடல்சார் பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை