உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு சார்பில் பிரதமரை சந்தித்து நிதி கோரலாம்: தினகரன் யோசனை

அரசு சார்பில் பிரதமரை சந்தித்து நிதி கோரலாம்: தினகரன் யோசனை

சென்னை: ''மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை பெற வேண்டும் என்றால், தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்தித்து நிதி கோரலாம்,''என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.அ.ம.மு.க., தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் இருந்து அடையாறுக்கு நேற்று மாற்றப்பட்டது. புதிய அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, தினகரன் அளித்த பேட்டி:மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவதாக ஒரு மொழி படிக்க வேண்டும் எனக் கூறுகிறது. தமிழக அரசு வேண்டாம் என்றால், இருமொழிக் கொள்கை போதும் என, அதை அரசியலாக்காமல் செயல்படுத்தலாம். அதற்கு பதில், ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மடைமாற்றும் விதமாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.தமிழக அரசு, இதில் அரசியல் செய்ய வேண்டியதில்லை. அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என்பது, அனைவருடைய விருப்பம். மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை. மூன்றாவது மொழி படியுங்கள் என்கிறது. வேண்டாம் என்றால் விட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். மாநில அரசு எதிர்த்தாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்கின்றனர்.தேசிய கல்விக் கொள்கையில் சேராவிட்டால், அதற்குரிய நிதியை பெற முடியாது என்று தான் மத்திய அமைச்சர் சொல்கிறார். மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதி பெற வேண்டும் என்றால், அதற்காக தமிழக அரசு தரப்பில் பிரதமரை சந்திக்கலாம். தி.மு.க., தன் தவறுகளை மறைக்க, மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mediagoons
பிப் 24, 2025 09:03

தமிழகத்தை இந்து மதவாத குண்டர்களிடம் அடகு வைத்தால்தான் காசு கிடைக்கும் என்பதை விட அவர்கள் கொடுக்கும் கையூட்டை வாங்கிக்கொண்டு வாலாட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.


Suppan
பிப் 24, 2025 11:49

என்னவொரு அறிவிலித்தனமான விஷமத்தனமான கருத்து? மத்திய அரசு பணம் கொடுப்பது குறிப்பிட்ட - மற்ற மாநிலங்கள் இதை அமல் படுத்துவிட்டுத்தானே பணம் பெறுகின்றன ?வேலைக்காக - மும் மொழிக்கொள்கையை அமல் படுத்துவதற்காக, அதற்காக ஆகும் செலவை ஈடு கட்டுவதற்காக = மற்ற மாநிலங்கள் பணம் பெற்றுக்கொண்டு அமல் படுத்தி உள்ளார்கள். "நாங்கள் அமல் படுத்த மாட்டோம் ஆனால் பணம் வேண்டும்" என்று கூறுவது மற்ற மாநிலங்களை கேணையர்கள் போல் நினைக்கிறது திருட்டு திராவிடக் கும்பல்கள். இதெல்லாம் புண்ணாக்கு கொள்கை. அடைந்தால் திராவிட நாடு என்ற அண்ணாதுரை அதை சுடுகாட்டுக்கே அனுப்பிவிட்டார். நீட்டை ஒழிப்பது எங்கள் கையில் இல்லை என்று பின்வாங்கியாகிவிட்டது அரசு. வீம்புக்காக தற்பொழுது 5000 கோடி ரூபாயை தமிழகம் இழக்கிறது. அது மட்டுமல்ல. ஏழை மாணவர்கள் எக்கேடு கெட்டுப்போகட்டும். நாங்கள் நடத்தும் பள்ளிகளிலிருந்து வரும் வருமானத்தை இழக்கத்தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இப்பொழுது சி பி எஸ் இ பள்ளிகளை ஆரம்பிக்க மத்திய அரசின் அனுமதி பெற்றால் போதும். திருட்டு திராவிடர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. சில பெரிய கம்பெனிகள் தங்கள் சி எஸ் ஆர் நிதியிலிருந்து சி பி எஸ் சி பள்ளிகளை ஆரம்பித்து ஏழை மாணவர்களைப்படிக்க வைத்தால் இந்தத்திருட்டு திராவிடர்கள் என்ன செய்ய முடியும்? இது நடக்க வேண்டும்.


Mediagoons
பிப் 24, 2025 09:01

இந்து மதவாத காட்டுமிராண்டிகள் குண்டர்களிடம் யாராவது பேசமுடியுமா ?


Mediagoons
பிப் 24, 2025 09:00

தனிமனித துதிபாடிகள் இந்து மதவாதிகள் .


Mediagoons
பிப் 24, 2025 08:59

காவ்லட்குறை ஞானசேகரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்பது போல் உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை