வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்மையே
நாகப்பட்டினம்:நாகையில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.கம்யூ.,-எம்.எல்.ஏ.,விடம் ஆதரவு கோரினார்.எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அ.தி.மு.க.,வில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகையில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான மணியன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர்.பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், அ.தி.மு.க., சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினர். அப்போது அப்பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த மா.கம்யூ.,வை சேர்ந்த கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ., மாலியிடம் துண்டு பிரசுரத்தை வழங்கிய ஓ.எஸ்.மணியன், தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டார். சிரித்துக் கொண்டே நோட்டீசை பெற்றுக் கொண்ட மாலி எம்.எல்.ஏ., 'வாங்க டீ சாப்பிடலாம்' என அழைக்க, 'இதெல்லாம் வெளியில தெரிஞ்சு, கூட்டணிக்குள்ள ஏதும் பிரச்னையாகிடப் போகுது. ரொம்ப நன்றி' என்று பதறியபடியே மணியன், அந்தப் பகுதியில் இருந்து நகர்ந்து சென்றார்.
நன்மையே