உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டான்செட் தேர்வு ரிசல்ட் வெளியீடு

டான்செட் தேர்வு ரிசல்ட் வெளியீடு

சென்னை:முதுநிலை இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கைக்கான, 'டான்செட்' நுழைவு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இளநிலை பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் படிப்பில் சேர்வதற்கு, டான்செட் மற்றும் சீட்டா என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவு தேர்வு, அண்ணா பல்கலை வழியே, ஜன.,24ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 39,301 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மதிப்பெண் பட்டியலை, ஏப்.,3 முதல், மே, 3 வரை, http://tancet.annauniv.edu/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை