உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக, அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜூன் 20) அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் கொடுத்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிகழ்ந்திருக்க கூடாத ஒன்று

முதல்வர் ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு பதிவிட்டதாவது: என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். அமைச்சர்கள், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 129 )

G Mahalingam
ஜூன் 23, 2024 11:44

கள்ள சாராயம் வருமானம் திமுகவுக்கு. ஆனால் இழப்பீடு அரசு வரி பணம்.


rama adhavan
ஜூன் 22, 2024 19:04

இதில் தெரிவது சாகாத நல்லவனும் அவன் குடும்பமும் வறுமையில் உதவி இன்றி சாகும். கெட்டு செத்தவர் குடும்பம் அரசு உதவியுடன் நன்கு வாழும்.


இராம தாசன்
ஜூன் 21, 2024 21:53

தலைவா சீக்கிரம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. உங்க தங்கை, கனி அக்கா, சொன்னதை நிறைவேற்றியதற்காக. தமிழகம் இளம் விதவைகள் முதல் மாநிலமாக இருக்கு என்று சொன்னார்கள் - இப்போது இல்லை. இப்போ கணவன் மனைவி இருவரும் சாராயத்தினால் இறந்து போகிறார்கள் - விதவைகள் இல்லை. என்ன புது பிரச்னை - நிறைய அனாதை சிறுவர் / சிறுமியர் உருவாகிறார்கள் - ஆனால் இதை பற்றி சொல்லவேயில்லை அதனால் கவலையில்லை


Balaji
ஜூன் 21, 2024 21:52

ஐயா பத்து லட்சம் போதாது. ஒரு கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடிக்கும் மக்கள் அதிகம் ஆவார்கள். கள்ள சாராயம் காய்ச்சும் உடன் பிறப்புகளுக்கும் வருமானம் கிடைக்கும்.


s vinayak
ஜூன் 21, 2024 19:42

மதுபிரியர்களின் மனைவிமார்களுக்கு அடித்தது ஜாக்பாட்.


S.V.Srinivasan
ஜூன் 21, 2024 09:49

2026 சட்டசபை தேர்தலுக்கு பலமான அடிக்கல் நாட்டி விட்டார் சுடாலின். எவன் அப்பன் வீட்டு காசு? அடுத்த கள்ள சாராயம் கியூ ரெடி ஆகிட்டிருக்கு. 10 லட்சம்னா சும்மாவா. வீட்டுக்கு ஒருத்தர அனுப்பிடுவாங்க.


pandit
ஜூன் 21, 2024 09:08

ஊக்கத் தொகை. இது மேலும் பலரை கள்ள சாராயம் குடிக்க வைக்கும்


Nagercoil Suresh
ஜூன் 21, 2024 08:58

வழி தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்த கதையை போல் தமிழக அரசு செய்திருக்கிறது. திருட்டுத்தனமாக சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச்சம் கொடுப்பது தேவை இல்லாதது, 10 லட்ச்சத்தை பார்த்து சிகிச்சை பெறுபவர்களின் வீட்டார் கவனிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது, கிராமங்களில் ஒரு காலத்தில் எல் ஐ சி யினால் பல கணவன் மார்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாக மக்கள் கூறுவதுண்டு... திருட்டுத்தனமாக செய்பவர்களை சந்திரனில் கொண்டுபோய் விட்டாலும் அங்கேயும் சாராயம் காய்ப்பார்கள் அவர்களை தடுக்க முடியாது. ஸ்டாலின் அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சுளுக்கெடுக்க வேண்டும். திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதே போல தான் குடிகாரங்களையும், ஒரு வீட்டை கெடுப்பதற்கு ஒரு குடிகாரன் போதும்...


panneer selvam
ஜூன் 21, 2024 01:25

Stalin ji , Just distribute liquor at concessional rate to all through ration shops immediately so that illicit liquor issue will be sorted out once for all . Kindly note for festival time, more quantity of liquor should be sold through ration shops preferably at free of cost . If you do it , next three generation of Stalin family will rule Tamilnadu


aaruthirumalai
ஜூன் 20, 2024 22:35

நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.


இராம தாசன்
ஜூன் 21, 2024 21:54

எதுக்கு - இந்த பிரச்னையை எழுப்பியவர்களை கைது செய்யவா


rama adhavan
ஜூன் 22, 2024 23:05

இது அரசின் கொள்கை முடிவு எனவே தலை இட முடியாது என சொல்லி மனுதாரருக்கு ஒரு லக்சம் அபராதத்துடன் மனு டிஸ்மிஸ் ஆகும். மனுதாரர், அவர் குடும்பம் பிறகு இறக்கும் வரை ரவுடிகளால் தர்ம அடி வாங்குவார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை