உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தம்பதியிடம் 10 பவுன் நகை பறிப்பு

தம்பதியிடம் 10 பவுன் நகை பறிப்பு

சிதம்பரம்: டூவீலரில் சென்று கொண்டிருந்த தம்பதியிடம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகையை கும்பல் ஒன்று பறித்துச்சென்றது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவரும் சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்ற போது, அங்கு மறைந்திருந்த கும்பல் ஒன்று, மஞ்சுளா அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சரடை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது. புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்