உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர் உண்டு

100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர் உண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணி மேற்பார்வையாளராக ஒருவரை நியமிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரை, பணி இணையாளராக தேர்வு செய்து, அவர் பணிகளை மேற்பார்வையிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது: ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிதளங்கள் இருப்பதால், ஒவ்வொரு பணிக்கும் ஒரு பணி இணையாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தனி நபர் மற்றும் சமுதாயப் பணி ஆகியவை, ஒரே பணித்தளத்தில் நடந்தால், ஒரு பணி இணையாளரே இரு பணிகளுக்கும் போதும் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அனைவரும், பணி இணையாளராக தகுதியானவர்கள். கடந்த ஆண்டுகளில் குறைந்தது, 50 நாட்களாவது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தகுதியான பெண் தொழிலாளர்கள் இல்லையெனில், ஆண் தொழிலாளரை நியமிக்கலாம் பணி இணையாளர் பணி துவங்கியது முதல் முடியும் வரை அல்லது ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஆகியவற்றில் எது முந்தியதோ, அந்த நாள் வரை, பணியாற்றலாம்; 100 நாட்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது.பணி இணையாளர், மின்னணு வருகைப்பதிவேடை பராமரித்தல், ஒவ்வொரு நாளும் வருகைப் பதிவு செய்தல், காலை மற்றும் மாலை, மின்னணு வருகைப் பதிவேடு செயலியை பயன்படுத்தி, புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Selva Prasanth
ஜூலை 20, 2024 22:17

? நமது கிராம புறங்களில் ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் வீழ்ச்சி கால்வாய் கள் சுத்தம் செய்து கொள்ளவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமையாக வைத்து இருக்க வேண்டும் மரம் ? வளர்ப்போம் மழை பெறுவோம் சுற்றுச்சூழல் பாதுகாப்புபோம் இதனால் 100நாள் உதவுகிறது ஃ??? வாழ் வளரும் ?


Narayanasamy
ஜூலை 19, 2024 15:33

அருமையான தகவல்.


Ksiva Tamil Nadu
ஜூலை 19, 2024 10:58

நான் திருவண்ணாமலை மாவட்டம் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தளப்பொறுப்பாளராக பணியாற்றுகிறேன், பெரணமல்லூர் தாலுகா, என்னோட மனசாட்சிக்கு நான் நேர்மையாக பணியாற்றுகிறேன், 100 நாள் வேலையாள் நிறைய வறுமையில் இருக்கும் மக்கள் பயனடைந்தனர்


Raa
ஜூலை 19, 2024 10:43

நாரோடு சேர்ந்து பூவும் நாறும்


s chandrasekar
ஜூலை 19, 2024 09:29

பணியாளர்கள் நன்றாக தூங்கியெழு அணைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் இந்த மேற்பார்வையாளர் . கொசு பத்தி, மின்விசிறி ,தலையணை ,போர்வை அனைத்தும் இருக்க வேண்டும் . வாழ்க இந்தியா ஜனநாயகம்


Muthu Kumaran
ஜூலை 19, 2024 08:02

the supervisor must ensure whether they sleeping well or not.


Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 07:45

இது ஒரு ஏமாற்று வேலை. நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், 100 நாள் வேலை என்று வயதானவர்களை சேர்த்து எல்லோரும் மரத்தடிகளில் டைம் பாஸ் செய்கின்றனர். இதில் கமிஷன் வேறு. முழு பணம் வேலை செய்பவர்களுக்கு செல்வதில்லை. மக்களின் வரிப்பணம் வேஸ்ட். சீமான் சொல்வது போல் விவசாய வேலைக்கு சென்றால் தான் இந்த 100 நாள் வெளிக்கு காசு கொடுக்கப்படும் என்று சொல்லுங்கள் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள்.


GSR
ஜூலை 19, 2024 07:12

நிறுவனங்களில் ஒரு கதை சொல்வதுண்டு. பத்து வேலை செய்யாதவர்களை பணியமர்த்தினார்களாம். அவர்கள் வேலை செய்வதை சூப்பர்வைஸ் பண்ண இன்னொரு வேலை செய்யாதவரை நியமித்தார்களாம் என்று. ஏனோ இந்த கதை இப்பொழுது நினைவுக்கு வந்து போகிறது.


spr
ஜூலை 19, 2024 07:11

ஒவ்வொரு களப்பணியில் திட்டமிடப்பட்டவை முடிக்கப்பட்டவை ஆன செலவு பணிக்கு ஆன நாட்கள் எனக் கணக்கு பார்த்தால் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை இத்திட்டம் பெரும்பாலும் வீண் செலவே. இது ஒரு வகை மானியம் பலர் முகவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி வேலையே செய்யாமல் அல்லது செய்த வேலையையே திரும்பக் கணக்கு காட்டி வருமானம் பெறுகிறார்கள் வேலை செய்யத் தெம்பில்லாத பல கிழவர்கள் கூட அங்கு வந்து தூங்கி இளைப்பாற பணம் பெறுகிறார்கள் இதில் புரியாத புதிர் இதற்குச் அளவிடுவது மத்திய அரசு ஆனால் அதனைக் கண்காணிக்க அதற்குத் துப்பில்லை மத்திய அரசின் முகவராக இருக்கும் ஆளுநர் கண்டு கொள்வதே இல்லை


GMM
ஜூலை 19, 2024 06:37

100 நாள் என்ன வேலை திட்டம்? இஷ்டம் போல வேலை திட்டமா? மனித சக்தி அதிகம் தேவையுள்ள விவசாயம், மின், குடிநீர், வடிகால், தெரு தூய்மை... துணை பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் வகுக்கும் எந்த திட்டமும் சரி இருக்காது. வீண் விரய திட்டம் நிறுத்துவது நல்லது.


மேலும் செய்திகள்