உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்களில் இருந்து, சட்டவிரோதமாக 198 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, வரும் 26ல் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உத்தரவு

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உதவி ஆணையரின் அறிக்கை, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. தேன்கனிகோட்டை, நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும்; கிருஷ்ணகிரி, பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

அறநிலையத் துறை அதிகாரிகளால் கூட, கோவில் நிலத்துக்குள் நுழைய முடியவில்லை; அவர்களை கடமையாற்ற விடாமல், சமூக விரோதிகள் தடுக்கின்றனர். இந்த நிலையை, அரசு அனுமதிக்கக் கூடாது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பெரும் அளவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதாகவும், நுாற்றுக்கணக்கில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை, அப்படியே ஒதுக்கி விட முடியாது. அதனால் தான், சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுப்பதற்கு எதிராக, அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தேசத்தின் சொத்தை பாதுகாக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. தேசத்தின் சொத்தை, பேராசைக்காரர்கள் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. அறநிலையத் துறையின் அறிக்கையில் உள்ள தீவிரத்தை பரிசீலித்து, நீதிமன்றத்தில் ஆஜராக சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

விபரம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் பதிவு உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க வேண்டும்.இந்த உத்தரவு குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உடனடியாக சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர் தெரியப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., வரும் 26ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
ஜூலை 21, 2024 21:20

சிவன் சொத்து குல நாசம். பெருமாள் சொத்து பெரிய நாசம். அம்பாள் சொத்து அதிக நாசம். முனீஸ்வரர் சொத்து முடிவில்லா நாசம். இவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் இன்று நன்றாக உள்ளது போல நடிக்க மட்டுமே முடியும். தெய்வம் நின்று கொல்லும்.


Sridhar
ஜூலை 21, 2024 12:53

இந்த அதிர்ச்சியூட்டும் செய்திதான் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இருந்திருக்கவேண்டும். ஆனால், ஒருவரும் பாஜக பமாகா உட்பட இதைப்பற்றி பேசமாட்டார்கள். ஓரிரு தினங்களில் மக்களும் அப்படியே மறந்து கடந்து சென்று விடுவார்கள். திருட்டு கும்பல் தைரியமாக தங்கள் திருட்டு ஆட்சியை தொடரும். அவ்வளவு பெரிய மணல் கொள்ளை ED வழக்கை சென்னை ஹைகோர்ட் அசால்டாக டிஸ்மிஸ் செய்து கொள்ளையர்களை காப்பாற்றியது. அதைபற்றிகூட ஒருபயல் பேசவில்லை. அப்படியே அமுக்கிவிட்டார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 09:50

ஆலயங்கள் சேகர் பாபு அறநிலையத்துறை //கட்டுப்பாட்டில் //உள்ளதாக கூறுகிறார். எனவே காவல் காக்கத் தவறிய திமுக அரசு இந்த ஆலயங்களுக்கு வட்டியுடன் முழு நஷ்ட ஈடு அளிக்க கோர்ட் உத்தரவிட் வேண்டும். பொறுப்பற்ற அமைச்சரிடமே வசூலிப்பது மேல்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 08:21

கோவில்கள் கொள்ளையர்களின் கூடாராமாக மாறிவிட்டது. அறமற்ற துறையை வெளியே துரத்த வேண்டும்.


Dharmavaan
ஜூலை 21, 2024 07:54

திருட்டு திராவிடம் கோயில்களை ஹிந்து மதத்தை இதன் மூலம் அழிக்கப்பார்கிறது


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2024 07:43

இந்துமத அழிப்பதற்காகவே திருட்டு திராவிட களவானிங்களால் ஏற்படுத்தப்பட்டதுதான் இந்துமத துரோகத்துறை அதில் பணியாற்றும் கிரிப்டோக்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் அரசுத்துறையில் பணியாற்றும் அனைவருமே கூட்டு களவானிகள்தான். ஓசியும் இலவசங்களும் வாங்கிக் கொண்டு திருட்டு திராவிட களவானிங்களுக்கு ஓட்டுப்போடும் இந்துக்கள் திருந்தாத வரை எதுவும் நடக்கபோவதில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்கி வருவானுங்க இந்த மானங்கெட்ட திராவிட களவானிங்க


Mani . V
ஜூலை 21, 2024 06:23

எல்லாப் புகழும் திராவிடக் திமுக, அதிமுக கட்சியினருக்கே.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 21, 2024 06:05

எவ்வளவு கொள்ளை, கொலை நடத்தலும் அறிவாளி தமிழக ஹிந்துக்களுக்கு கவலை இல்லை, 500 வாங்கிக்கொண்டு, கோவிலை இடிக்கும் திருட்டு திராவிட கழிசடைகளுக்கு தான் வோட்டை போடுவர். வெட்கக்கேடு,


Rangarajan
ஜூலை 21, 2024 05:43

படிக்கும் போதே மிக மிக அதிர்ச்சியாக இருக்கிறது. வெட்கம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை