உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 எம்.பி., 4 எம்.எல்.ஏ., இருந்தும் வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை

2 எம்.பி., 4 எம்.எல்.ஏ., இருந்தும் வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை

சென்னை : ''தமிழகத்தில் இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், வி.சி., கொடியை ஏற்ற முடியவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் இன்று நடந்தது.

இதில், திருமாவளவன் பேசியதாவது:

நமக்கு அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து, கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்துப் போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. எதிர்ப்பு மனநிலையை வீரம் என்று எண்ணுவோர், அது ஒரு நல்ல வியூகம் அல்ல என்பதை உணர வேண்டும். அதிகாரிகள் நம்மிடம் நல்ல பதிலை வழங்குவர். ஆனால், ஒன்றும் நடக்காது. அத்தகைய அதிகாரிகளையும் செயல்பட வைக்க, அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும். தற்போது, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், நம்மால் கொடியேற்ற முடியவில்லை. நாம் கொடியேற்றும் போதுதான் சட்டம் பேசுவர்.இதன் வாயிலாக, இன்னும் அரசியல் வலிமை பெறுவதற்கான தேவையை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே, கசப்பான உண்மை. நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தியா சமத்துவம் பெற்று இருக்கும்.சனாதன தர்மம் தான் நடைமுறையில் உள்ளது. அதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, 16 - 4ஏ சட்டப்பிரிவு முக்கியம். மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டு, பதவி உயர்வு வழங்க முடியும்.இதுதொடர்பாக, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம்.சட்டம் வந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதற்காக, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் நாம் நுழைய வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

R.P.Anand
மார் 03, 2025 10:00

அப்படியே தனியா நின்னு ஜெயிச்ச மாதிரி உதார் விடாத அது கூட்டணி ஓட்டு. 2 எம்பி 4 MLA.


Mecca Shivan
மார் 02, 2025 17:28

இப்படி கோழையாக விருப்பத்திற்கு பதிலாக கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் dr கிருஷ்ணசாமிக்கு எடுப்பாக சென்றுவிடலாம்


Shunmugham Selavali
மார் 02, 2025 17:08

முதுகெலும்பு இல்லாத திமுகவின் அடிமை.


lakshmikanthan S.B
மார் 02, 2025 13:45

அப்படியே பார்லிமென்டில் சட்டம் இயற்றியது அம்பேத்கர் இல்லை சங்கதிகள் என்று சொல்ல வேண்டியதுதானே? தமிழ் நாட்டில் மட்டும் உன்னால் உளற முடியும்.


ஆரூர் ரங்
மார் 02, 2025 12:32

சரக்கு மிடுக்கு வேலைகளை கழக குடும்ப ஆட்களிடம் காட்டுங்க பார்ப்போம். வாழ்வா சாவா பிரச்சனைக்கு முடிவு தெரிந்து விடும். திருட்டுக் கழகங்கள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். தீண்டாமை இருக்கும் வரை உங்களுக்கும் பிழைப்பு ஓடும்.


எவர்கிங்
மார் 02, 2025 11:21

வி.சி என்பதே விழுப்புரம்/சிதம்பரம் என்றுதானே அர்த்தம்?!


எவர்கிங்
மார் 02, 2025 11:20

முதலில் ப்ளாஸ்டிக் சேரை மாற்ற/மறக்க முயற்சி செய்


Sivagiri
மார் 02, 2025 10:54

அட , அவங்க என்ன உங்க சொந்த எம் எல் ஏ , எம்பிக்களா ? , , அதோட அவர்களால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? உங்களுக்கும் இல்ல ஊருக்கும் இல்ல , டோடல் வேஸ்ட் . . .


Amar Akbar Antony
மார் 02, 2025 08:06

தலையை விட்டு வாலை பிடிப்பானேன்? திருமா அவர்கள் எனக்கு தெரிந்து எம் எல் ஏ ஐந்து வருடம் எம்பி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் என்ன சாதித்தீர்கள்? தி மு க வின் முதல் அடிமையாக இருக்கிறீர்கள் அதுவே உங்கள் சமூகத்தின் முதல் ஆதி. தலைவனே அடிமையாக இருக்கும்போது மற்றவர்கள் முன்னேற வழியில்லை. அதனால்தானே அர்ஜுன் அவர்கள் பிரிந்து சென்று அவராவது முன்னேற வழி வகுத்துள்ளார். தங்களை நம்பி இருப்பவர்களை மேலே கொண்டுவர முடியாமல் மன்னரின் அடிவருடியாக இருப்பதால் ஊஹூம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறாது.


c.mohanraj raj
மார் 02, 2025 07:26

ஜெயித்தது அவர்கள் பணத்தில் அவர்கள் சின்னத்தில் பிறகு என்ன செய்வது மூடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை