உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்துக்கு 20வது இ.இ.பி.சி., விருது 

சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்துக்கு 20வது இ.இ.பி.சி., விருது 

சென்னை:இந்திய இன்ஜினியரிங் ஏற்றுமதி கவுன்சில் என்ற, இ.இ.பி.சி.,யின் சிறந்த ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருது, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.இந்திய இன்ஜினியரிங் கவுன்சில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரியில் சமீபத்தில் நடந்தது. இதில், சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உணர்த்தும் வகையில் செயல்படும், சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்துக்கு, 20வது இ.இ.பி.சி., விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்விருதை, இந்திய தொழில் வர்த்தக துறை இணை செயலர் விமல் ஆனந்திடம், சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவன தலைமை சந்தை பிரிவு அதிகாரி பூபதி பெற்றுக்கொண்டார்.இதுகுறித்து, தலைமை சந்தை பிரிவு அதிகாரி பூபதி பேசியதாவது:அர்ப்பணிப்பு முதல் புதிய கண்டுபிடிப்புகள் வரை, தொழில்துறைக்கு தன் முக்கிய பங்களிப்பை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் அளித்துள்ளது. இவ்விருது, எங்களுக்கு முக்கிய மைல் கல்லாக திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும், இவ்விருது அங்கீகாரமாக உள்ளது. மேலும், சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை