உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

"அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்": எல்.முருகன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும், அசைக்க முடியாத சக்தி என்பதை நிருபித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசைக்க முடியாத சக்தி

தமிழகத்திலும் ஆளும் அரசின் அதிகார பலம், பண பலம், அரசியல் சூழ்ச்சியை முறியடித்து பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும், அசைக்க முடியாத சக்தி என்பதை நிருபித்துள்ளது. தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதி செய்துள்ளது. தமிழக மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட எனக்கு பெரும் ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்பணிப்பு

நீலகிரி தொகுதியில் களப் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், என் மீது அன்பும் பாசமும் கொண்ட நல் உள்ளங்களுக்கு எனது நன்றி. நீலகிரி தொகுதியில் இருந்து நான் எம்.பி.,ஆக தேர்வாகாவிட்டாலும் அதனை எனது தொகுதியாகவே நினைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதிபட கூறுகிறேன். வளமான தமிழகத்திற்கும் வலிமையான பாரதத்திற்கும் தொடர்ந்து அர்பணிப்புணர்வுடன் பணியாற்றுவோம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எல்.முருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

NAGARAJAN
ஜூன் 06, 2024 12:06

நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா


Vasoodhevun KK
ஜூன் 06, 2024 11:01

கூட்டணி இல்லாமல் தீம்கா என்னைக்கு ஜெயிச்சிருக்கு. கூட்டணியில் போட்டியிட்டு புரட்சி தலைவர் கிட்ட தொடர்ந்து மூன்று முறை தோற்றவர்கள்.


பல்லவி
ஜூன் 06, 2024 08:11

சொந்த காசில் சூனியம் பிரச்சனை இல்லை


Srivatsan
ஜூன் 06, 2024 07:56

இதுல உனக்கென்ன பெருமை.தோற்ற பிறகு உனக்கு என்ன வீண் jambam.


Vasoodhevun KK
ஜூன் 06, 2024 10:50

ஜெயித்து நீங்க என்னத்த செய்ய போறீங்க. இந்திய ஊழல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சிய பிடிக்க முடியவில்லை.


பிரேம்ஜி
ஜூன் 05, 2024 21:21

வெட்டிப்பேச்சு வேலைக்கு ஆகாது.


Ganesh Shetty
ஜூன் 05, 2024 19:58

தொகுதியில் வேலைசெய்வதெற்கே ஆள் இல்லை தொண்டர்ககலை விட தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர்


Vathsan
ஜூன் 05, 2024 19:13

மோடியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து உள்ளது கண்கூடாக தெரிகிறது. உபி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உதாரணம். நாயுடு, நிதிஷ் கூட கூட்டணி வைத்து பதவியில் ஒட்டிக்கொண்டு உள்ளார்கள். நிர்மலா, அமித் ஷா, மோடி மாதிரி மக்களை சந்திக்காத தலைவராக இருக்காதீர்கள். அப்படியே இருந்தாலும் நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை இது போன்ற பதில்கள், ஆணவத்தின் உச்சம். இன்னும் பழைய காங்கிரஸ், நேரு மீது குற்றம் சொல்லி காலத்தை தள்ளாதீர்கள். மத வெறுப்பு, மொழி வெறுப்பு அரசியலை கை விடுங்கள். நீங்கள் செய்ததை சொல்லி வோட்டு கேளுங்கள். இப்படியே போனால், அடுத்த எலெக்ஷனில் இப்போ வாங்கினதில் பாதி கூட கிடைக்காது.


Parthasarathy Sarathy
ஜூன் 06, 2024 12:04

கரெக்ட்


Gurumurthy Kalyanaraman
ஜூன் 05, 2024 18:40

பி.J.P. எம்.பி. க்கள் இந்த மாதிரி ஏதாவது கருத்து தெரிவிக்கும் முன் நம்மிடத்தில் என்னவெல்லாம் சரிவரவில்லை மக்களுக்கு என்பதை ஆராய்ந்து அதை களைவது உத்தமம். Seiveerghala?


MADHAVAN
ஜூன் 05, 2024 17:53

மண்ணைக்கவ்விய முருகனுக்கு இது அதிகம்,


Mani . V
ஜூன் 05, 2024 17:10

அப்புடியா? சொல்லவே இல்லை.


மேலும் செய்திகள்