சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா உட்பட, 30 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர மாநிலம், விஜயவாடா கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுபித்ரகுண்டா - சென்ட்ரல், காலை 4:55 மணி மற்றும் சென்ட்ரல் - பித்ரகுண்டா, மாலை 4:30 மணி ரயில்கள், வரும் 24, 25, 26, 27, 28, ஜூலை 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 22, 23, 24, 25, 26ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், வரும் 16 முதல்; விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், 17ம் தேதி முதல்; விசாகப்பட்டினம் - எழும்பூர் சிறப்பு ரயில், 17ம் தேதி முதல்; எழும்பூர் - விசாகப்பட்டினம், 18ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றனவிசாகப்பட்டினம் - எழும்பூர் சிறப்பு ரயில், வரும் 15ம் தேதி முதல்; எழும்பூர் - விசாகப்பட்டினம் ரயில், 16ம் தேதி முதல்; சந்திரகாச்சி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், 21ம் தேதி முதல்; எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - சந்திரகாச்சி சிறப்பு ரயில், 23ம் தேதி முதல்; தாம்பரம் - தன்பாத் வாரந்திர சிறப்பு ரயில், 16ம் தேதி முதல்; தன்பாத் - தாம்பரம் ரயில், வரும் 19ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றனகோவை - பாருனி ரயில், 18ம் தேதி முதல், பாருனி - கோவை ரயில், 21ம் தேதி முதல்; தாம்பரம் - பாருனி ரயில், 20ம் தேதி முதல்; பாருனி - தாம்பரம் ரயில், 22ம் தேதி முதல்; தாம்பரம் - சந்திரகாச்சி ரயில், வரும் 19ம் தேதி முதல்; சந்திரகாச்சி - தாம்பரம் ரயில், 20ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றனஇதேபோல், சென்னை எழும்பூர் - சந்திரகாச்சி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மால்டா டவுன் உட்பட, 30 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 10 ரயில்கள் ரத்து
சென்ட்ரல் - மைசூர் இரவு 9:15 மணி காவேரி விரைவு ரயில், வரும் 1, 2, 8, 9ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது மைசூர் - சென்ட்ரல் இரவு 9:00 மணி காவேரி விரைவு ரயில், வரும் 2, 3, 9, 10ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுசாம்ராஜ்நகர் - திருப்பதி மாலை 3:30 மணி விரைவு ரயில், வரும் 1, 8ம் தேதிகளிலும், திருப்பதி - சாம்ராஜ்நகர் இரவு 9:55 மணி விரைவு ரயில், 2, 9ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றனதிருப்பதி - சென்ட்ரல் காலை 6:25 மணி, சென்ட்ரல் - திருப்பதி மாலை 4:35 மணி ரயில்கள், ஜூலை 2, 9ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்ட்ரல் இரவு 10:40 மணி ரயில், ஜூலை 2, 9ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுசென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இரவு 10:50 மணி ரயில், ஜூலை 3, 10ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுகே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் இரவு 10:40 மணி ரயில், ஜூலை 30 மற்றும் ஆக., 6, 13ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுசென்னை சென்டரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இரவு 10:50 மணி ரயில், ஜூலை 31, ஆக., 7, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.