உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் எழுத, படிக்க தெரியாமல் தமிழகத்தில் 5 லட்சம் பேர்

தமிழ் எழுத, படிக்க தெரியாமல் தமிழகத்தில் 5 லட்சம் பேர்

சென்னை:தமிழகம் முழுதும், 18 வயதுக்கு மேலானவர்களில், எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில், 5 லட்சம் பேருக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துகள் கூட தெரியவில்லை.முறைசாரா கல்வி இயக்குனரகம் சார்பில், கிராமங்கள், நகரங்களில் எழுத்தறிவு பெறாதவர் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில், எழுத்தறிவு பெறாமல் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 'அ, ஆ' என்ற தமிழ் எழுத்துகள் கூட எழுத, படிக்க தெரியாத நிலையில், 5 லட்சம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில், 11,869 பேர் தமிழ் எழுத்துகள் தெரியாமல் உள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 40,191 பேர் தமிழ் தெரியாமல் உள்ளனர்; அவர்களில், 29,176 பெண்கள்.முதல் 10 மாவட்டங்களில், கிருஷ்ணகிரி, 33,020; மதுரை, 23,640; திருவண்ணாமலை, 23,423; கள்ளக்குறிச்சி, 21,857; ஈரோடு, 20,279; தர்மபுரி, 19,983; கோவை, 18,725; திண்டுக்கல், 18,500; விழுப்புரம், 16,744 பேர், தமிழ் எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். இவர்களில், 18 வயது பூர்த்தியான இளைஞர், இளம்பெண்களும் உள்ளனர்.இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைந்த அளவில், 2,797 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பின், 4.80 லட்சம் பேரும் தமிழ் எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இன்னும், 2 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்ற, விரைவில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என, முறைசாரா கல்விஇயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kumar
ஜூன் 08, 2024 20:00

தமிழ் வானொலி , தொலைகாட்சி அறிவிப்பாளர்களை கேட்டதில்லையா ? வேறு எந்த மாநிலத்திலும் , மொழியிலும் அவரவர்கள் மொழியை சரியாக பேச எழுத தெரியாதவர்கள் இருக்கும் அவலம் இல்லை . அறுபது ஆண்டு தமிழ் வளர்த்த திராவிஷ மாடல் ஆட்சிகளின் பயன் . என்ன இருந்தாலும் துண்டு சீட்டு ஆட்சிக்கு இத்தனை முட்டு கூடாது . தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுவதெல்லாம் தங்களை வாழ வைப்பதற்காக என்று உன்னை போன்ற அடிமைகளுக்கு புரியாத வரை இப்படித்தான் .


Sampath Kumar
ஜூன் 08, 2024 10:33

இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல தெலுங்கு, கன்னடர்கள் இவர்களை கணக்கில் சேர்த்து தமிழ் நாட்டில் தமிழ் தெரியாத தமிழர்கள் என்று பொய் செய்தி போட்டு அதையும் நம்பி பதிவும் போடுதுகள் கலகொடுமைடா


மு. செந்தமிழன்
ஜூன் 08, 2024 06:52

இந்த கணக்கில் எங்கள் தங்க தலைவன் தானைத்தலைவன் சுடலை மாடசாமியும் இருக்கிறார், ரெம்ப திணறி எழுத்து கூட்டி தட்டு தடுமாறி வாசிக்கிறார்


rama adhavan
ஜூன் 08, 2024 06:52

ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு. எனது சொந்த மதிப்பீடு படி ஐம்பது லட்சம் அதற்கும் அதிகம் இருக்கும். வங்கிக் கணக்குக்காக தமிழில் கையொப்பம் மட்டும் போடத் தெரிந்தவர் மற்றபடி தற்குறி தான்.


ramani
ஜூன் 08, 2024 06:03

குறைவாக உள்ளது.‌இன்னும் சிறப்புடன் செயல்பட்டு அதிகமாக்க வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை