உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓவர் லோடு ஏற்றிய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்

ஓவர் லோடு ஏற்றிய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்

வானுார்: வானுார் அருகே அளவுக்கு அதிகமாக ஜல்லி, கிரஷர் பவுடர் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.வானுார் அடுத்த திருவக்கரை குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி மற்றும் கிரஷர் பவுடர் ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்தது.அதனையொட்டி திண்டிவனம் வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், ஆண்டியார்பாளையம் சோதனைச் சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கிளியனுார் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில், அளவுக்கு அதிகமாக ஜல்லி, கிரஷர் பவுடர்கள் ஏற்றிச்சென்ற 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 08, 2024 06:34

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனும், அதிகாரிகளின் துணையுடனும் கனிமவளங்களை கடத்தும் கும்பல் மீது ஒரு எழவு நடவடிக்கையும் எடுக்க முடியாது, திராணி இருக்காது.


புதிய வீடியோ