உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சந்திரகாச்சி, அகர்தலா உட்பட 6 ரயில்கள் ரத்து

சந்திரகாச்சி, அகர்தலா உட்பட 6 ரயில்கள் ரத்து

சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, தாம்பரம் - சந்திரகாச்சி உட்பட ஆறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு: மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி - தாம்பரம் அந்த்யோதயா ரயில், ஜூலை 8ம் தேதி ரத்து செய்யப்படுகிறதுதாம்பரம் - சந்திரகாச்சி அந்த்யோதயா ரயில், ஜூலை 10ம் தேதி ரத்து செய்யப்படுகிறதுகர்நாடக மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக, திரிபுரா மாநிலம் அகர்தலா செல்லும் ஹம்சபர் விரைவு ரயில், ஜூலை 5ம் தேதி ரத்து செய்யப்படுகிறதுஅகர்தலா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில், ஜூலை 6ம் தேதி ரத்து செய்யப்படுகிறதுமேற்க வங்க மாநிலம் மால்டா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில், ஜூலை 7ம் தேதி ரத்து செய்யப்படுகிறது எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மேற்கு வங்க மாநிலம் மால்டா விரைவு ரயில், ஜூலை 9ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ