உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 69 போலீசாருக்கு உளவியல் பட்டய படிப்பு பயிற்சி

69 போலீசாருக்கு உளவியல் பட்டய படிப்பு பயிற்சி

சென்னை:மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து, 69 போலீசாருக்கு உளவியல் தொடர்பான பட்டயப்படிப்பு பயிற்சி வகுப்பை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.தமிழக போலீசார் மன அழுத்தத்தை குறைப்பதற்கு, பெங்களூருவில் இயங்கி வரும், மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமான, 'நிம்ஹான்ஸ்' உடன் இணைந்து, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 1.06 லட்சம் போலீசார் கலந்து கொண்டனர். இதில், மன அழுத்த மேலாண்மை மற்றும் நிறைவாழ்வு பயிற்சி பெற்ற 115 கவலர்கள் உட்பட 246 பேர், உளவியல் நல வாழ்வு தொடர்பான பட்டய படிப்பு பிடிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இப்பயிற்சியின் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, 46 போலீசார் பட்டயப் படிப்பில் சேர்ச்சி பெற்றனர். மூன்றாம் கட்டமாக, 69 போலீசாருக்கு, ஆறு மாத பட்டய படிப்பு வகுப்பை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். கூடுதல் டி.ஜி.பி., வினித்தேவ் வான்கடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ