மேலும் செய்திகள்
இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை
15-Mar-2025
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 'குரூப் - 4' தேர்வில் வென்ற 187 பேரை, தமிழக பள்ளிக்கல்வி துறையில் இளநிலை உதவியாளராக நியமிப்பதற்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது. அந்தந்த மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலரால் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஆன்லைன் கலந்தாய்வு என்பதால், நேற்றே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள், காலை 8:30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-Mar-2025