உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம் சீனிவாசனுக்கு ஒரு நியாயமா?

நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம் சீனிவாசனுக்கு ஒரு நியாயமா?

கோவை அன்னப்பூர்னா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலாவிடம் கோரிக்கை வைத்துத்தானே பேசினார். அதற்காக மன்னிப்பு கேட்க வைப்பது அதிகார தோரணியின் உச்சம். மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோ எடுத்து பொது வெளியில் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. நிதின் கட்காரி, நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் உயிர் காக்கும் பொருட்களுக்கும், தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகளுக்கும், உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிப்பது ஏன் என கேட்டுள்ளார். அதற்காக அவரை மன்னிப்பு கேட்க வைக்க முடியுமா? ஆக, நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம், சீனிவாசனுக்கு ஒரு நியாயமா?தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பிற கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. இந்த கூட்டணி ஒரு மகா சமுத்திரம். அவ்வப்போது அலை அடிக்கும், ஆனால் அமைதியாகி விடும். தி.மு.க., கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. இதே கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலுக்கும் தொடரும். செல்வபெருந்தகை,தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை