உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை வேண்டும்

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை வேண்டும்

தமிழகத்தில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 150 போலீசார் என்பதை 200ஆக உயர்த்த வேண்டும். அதன் அடிப்படையில் கூடுதலாக 40,000 போலீஸ் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்று 25 மாதங்கள் ஆகியும், இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதேபோல், 14 தேர்வாணைய உறுப்பினர்களில், 9 பேர் மட்டுமே உள்ளனர். இந்த காலியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் கடையில் குடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, பா.ம.க., செயற்குழுவில் முடிவு எடுத்த பிறகு, போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்.ராமதாஸ்,தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ