உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுமக்கள் மீது புது கட்டண சுமை

பொதுமக்கள் மீது புது கட்டண சுமை

மின் வாரியம், ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில், இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கிடும் புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறையில், வாடகைக்கு குடியிருப்போருக்கு, எப்படி மின் கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை. மேலும், இரு மின் இணைப்புகள் என்பது, பெயர் அடிப்படையிலா அல்லது முகவரியின் அடிப்படையிலா என்பதற்கான விளக்கமும் இல்லை.இதனால், வாடகைக்கு குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது. புதிய நடைமுறையில் உள்ள தெளிவின்மை காரணமாக, மேலும் மின் கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். - அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 22, 2024 09:06

அரசியல் வாதிகள் பணக்காரர்களுக்காகவும் குற்றவாளிகலிக்காவுமே போராடுகின்றனர். நேர்மையானவர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் போராட யாரும் முன் வருவது இல்லை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி