உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன் கூட்டியே தேர்தல் நடத்தி உதயநிதிக்கு பட்டம் சூட்ட திட்டம்

முன் கூட்டியே தேர்தல் நடத்தி உதயநிதிக்கு பட்டம் சூட்ட திட்டம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு எந்தவித பொருட்களும் கிடைப்பதில்லை. எதற்கெடுத்தாலும் 'டுவிட்' போடும் நடிகர் கமல்ஹாசன், மின்கட்டண உயர்வுக்கு ஏன் கண்டித்து டுவிட் போடவில்லை.'இந்தியன் -2' படத்தில், மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் உனக்கு மண்ணிலே இடம் எதற்கு என்று வசனம் பேசிக்கொண்டே, தன் கைவிரல்களால் வர்மக்கலை மூலம் தவறு செய்தவர்களை கமல்ஹாசன் கொலை செய்வார். தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வும் மனிதர்களின் ரத்தத்தினை உரியும் நிகழ்வு தான். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து 'இந்தியன் 2' திரைப்படத்தைப் போல, முதல்வர் ஸ்டாலினையும் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.தமிழக சட்டசபை காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே 2025ல் தேர்தலை நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தி அவரது மகன் உதயநிதிக்கு பட்டம் சூட்டலாம் என அவர் நினைக்கிறார். ஆனால், மக்கள் பட்டம் சூட்ட விடாமல் மட்டம் அடிப்பர்.கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ