மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
1 hour(s) ago
கருப்பாயூரணி : மதுரை, ஆண்டார்கொட்டாரம், பிள்ளையேந்தலை சேர்ந்தவர் முத்துக்குமார், 29. இவரும், சென்னை மாதவரத்தை சேர்ந்த பவித்ரா, 24, என்பவரும் காதலர்கள் என கூறப்படுகிறது. காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்காக காத்திருந்தனர். பவித்ரா தோழி திருமணம் சிவங்கையில் நடந்தது.இதில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த பவித்ரா, முத்துக்குமாருடன் பைக்கில் சிவகங்கைக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றார். திருமணம் முடிந்து மதுரை வந்தபோது, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு உறங்கான்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பவித்ரா இறந்தார். அருகில் இருந்தவர்கள் முத்துக்குமாரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago