உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்வெளியிடப் பட்டது.புதுச்சேரி சேர்த்து, 33 லோக்சபா தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, 18 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு 5; புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீதமுள்ள, 32 லோக்சபா தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., களம் இறங்குகிறது. இடைத்தேர்தல் நடக்க உள்ள, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.அ.தி.மு.க., போட்டியிடும், 33 தொகுதிகளில், 16 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு, நேற்று வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.அ.தி.மு.க., போட்டியிடும் 33 லோக்சபா தொகுதிகளில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.ஒரு முன்னாள் எம்.பி.,யும், இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.., க்களும் போட்டியிடுகின்றனர். மற்ற அனைவரும் புதுமுகங்கள். தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 18 தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.எட்டு தொகுதிகளில் காங்கிரசுடனும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தலா இரண்டு தொகுதிகளிலும்; ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் தலா ஒரு தொகுகளிலும் அ.தி.மு.க., மோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை