உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பொள்ளாச்சியில் அ.தி.மு.க., சறுக்கல்

6 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பொள்ளாச்சியில் அ.தி.மு.க., சறுக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி : பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 6 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வினர் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களாக இருந்தும், அக்கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததால், தொண்டர்கள் 'அப்செட்' ஆகினர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார் என, அக்கட்சி தலைமை அறிவித்தது. 'குஷி'யான கட்சித் தொண்டர்கள், 6 சட்டசபை தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசார கூட்டம் நடத்தி, ஆதரவு திரட்டினர்.இது ஒருபுறமிருக்க, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வை சேர்ந்த 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,களும் களம் இறங்கினர். ஆனால், நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, ஒவ்வொரு சுற்றிலும் கார்த்திகேயன் பின்னடைவை சந்தித்தார். இது ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்த அ.தி.மு.க., முகவர்களை சோர்வடையச் செய்தது. முடிவில், கார்த்திகேயன் 2,79,966 ஓட்டுகள் பெற்று, 2,50,162 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., ஈஸ்வரசாமியிடம் தோல்வியைத் தழுவினார். இதனால், அ.தி.மு.க., வினர் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினர்.கடந்த, 2016ல், ஜெ., மறைவுக்கு பின், 2019 லோக்சபா தேர்தலின் போதும், 5 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இருந்தும், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கிய மகேந்திரன் தோல்வியை தழுவினார்.கடந்த, 2021 சட்டசபை தேர்தல் பொள்ளாச்சி லோக்சபாவுக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதியிலும் அ.தி.மு.க., வென்றது. ஆனால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணி வியூகத்தில் அ.தி.மு.க., சொதப்பல் காரணமாகவே, தற்போது தோல்வியை தழுவியுள்ளது, என, அ.தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanivel
ஜூன் 05, 2024 08:15

அதிமுக வின் ஆணவத்தால் பிஜேபி பத்து இடங்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம் 16 கட்சிகளை கூட்டணி வைத்ததால் தி மு க தமிழ்நாட்டில் 40 இடத்தையும் கைபற்றியுள்து ஆனால் தனித்தனியாக நின்றால் மிக மிக சொற்ப ஓட்டுகளைத்தான் பெறுவார்கள் மொத்தத்தில் பிஜேபியும் நாம் தமிழர்கட்சியும் வளர்ச்சி பெற்றுவிட்டது


ராது
ஜூன் 06, 2024 10:02

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு ஒரு வேளை டாஸ்மாக் இந்த வேலையை செய்திருக்குமோ - அடுத்த கட்சி ஆட்சிக்கு வர எதை திறக்கலாம் சாரயத்திற்கு பிறகு - தமிழ் இளைஞர்கள் அதை நோக்கி போவதை புரிந்தால் அடுத்த ஆட்சிக்கு டிரக் மருந்துகிடைச்சுடும் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் ஒரு வசீகர வாக்குறுதி கொடுக்க - முந்தும் கட்சி முன்னேறும் என்பதில் ஐயம் உண்டோ


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை