UPDATED : மார் 28, 2024 07:04 PM | ADDED : மார் 28, 2024 06:42 PM
சிவகாசி: ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் அ.தி.மு.க,வால் தூக்கம் போய்விட்டது என சிவகாசி தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.லோக்சபா தேர்தலையொட்டி விருதுநகர் தே.மு.தி.க, வேட்பாளர் விஜயபிரகரனை ஆதரித்து சிவகாசி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிச்சாமி பேசியது,ஸ்டாலினும், உதயநிதியும் செல்லும் இடமெல்லாம் என்னைபற்றியே பேசுகின்றனர். அ.தி.மு.க., வளர்ச்சியால் அவர்களுக்கு தூக்கம் போயிவி்ட்டது. புயல், வந்தாலும் வெள்ளம் வந்தாலும் உயிரை கொடுத்து மக்களை காக்கும் கட்சி என பெயர் பெற்றது அ.தி.மு.க., தான். யார் கட்சிக்கு வந்தாலும் அவர்களை கைதூக்கிவிடுவது தான் அ.தி.மு.க.,வின் வழக்கம்.அ.தி.மு.க, வை அழிக்க நினைத்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.தன் கட்சிக்காரர்கள் என்ன அட்டூழியம் செய்கிறார்கள் என்பதை ஸ்டாலினே பொதுக்கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். தி.மு.க, விடம் 38 எம்.பி.க்கள் இருந்தும் இங்கு பட்டாசு தொழில் பிரச்னையில் உள்ள தடைகளை நீக்க எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக இங்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ஸ்டாலின் ,பட்டாசு பிரச்னையால் பாதிக்கப்பட்டு தொழில் நசிவை சநதித்து வரும் வேளையில் மக்கள் கடும் அவதி படுகின்றனர். அவர்களை பார்த்து நீங்கள் நலமா என கேட்கிறார் ஸ்டாலின்கடந்த அ.தி.மு.க, ஆட்சியின் போது எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி கவர்னரிடம் மனு கொடுக்கிறார். அப்போது கவர்னர் நல்லவராக தெரிந்தாரா? மக்கள் மீது வரி வரிமேல் வரியை சுமத்திய போதிலும், தமிழக அரசு கடனில் தான் உள்ளது.இங்கு போட்டியிடும் விஜயபிரபாகரனை வெற்றி பெற செய்தால் பட்டாசு பிரச்னைக்காக பார்லிமென்ட்டில் நிச்சம் குரல் கொடுப்பார். அ.தி.மு.க, வேட்பாளர்களை விட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். கவர்னர் திமுக அரசு மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் பார்லி தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடந்து இருக்கும்., தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டம் போன்றவற்றை திமு்க அரசு நிறுத்தியதால் மக்கள் அவதி படுகின்றனர். தமிழ்நாட்டில் கஞ்சா விற்காத இடமமேஇல்லை என்ற அளவிற்கு தமிழகத்தில் போதை பொருள் கலாசாரம் உள்ளது. போதை பொருள் கடத்தலுக்கு திமுக துணை நிறகும்போது அதை திமுக அரசு எப்படி தடுக்கும். கடுமையாக உழைத்து விவசாயம் செய்த உடம்பை கொண்ட எனக்கு முதுகெலும்பு உள்ளதா என ஸடாலி் கேட்கிறார். நலலாட்சி நடத்துவதற்காகவே திமுகவிடம் மக்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தார்களே தவிர எங்கள் மீது பொய்வழக்கு போடுவதற்காக அல்ல. தம்மீது போடப்பட்ட வழ்க்கை திரும்ப பெறுவதாக முனுதாரர் கூறிய பின்னரும் வழக்கை நடத்தி நிரபராதி என தீர்ப்பு பெற்றேன். மடியில் கனமில்லாததால் பயமில்லை எங்கள் மீது போடப்பட்ட வழக்கை முறியடிக்கும் அளவுக்கு முதுகெலும்பு உள்ளது. அதே போல் அதிமுக அளித்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு முதுகெலும்பு உள்ளதா ? இவ்வாறு அவர் பேசினார்.