உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3வது மொழி படிப்பதை அ.தி.மு.க., தடுக்காது

3வது மொழி படிப்பதை அ.தி.மு.க., தடுக்காது

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அவருடைய சொந்த ஊரான தேனியிலேயே செல்வாக்கு கிடையாது. அதற்காகவே, அ.தி.மு.க., சார்பில் தேனியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.பழனிசாமி தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். கூட்டணி தொடர்பாக என்ன வியூகம் உள்ளது என்பது குறித்து, அவருக்கு மட்டுமே தெரியும். கட்சியின் மற்ற தலைவர்களுக்கு தெரிந்தாலும், அதை வெளியில் சொல்லக் கூடாது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றாலும், பழனிசாமியே முடிவெடுப்பார்.இருமொழி கொள்கையைத் தான் அ.தி.மு.க., ஆதரிக்கும். அதற்காக, மூன்றாவது மொழி படிப்பதை தடுக்க மாட்டோம். மூன்றாவது மொழியை ஏற்கவில்லை என்பதற்காக, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்துவது தவறு. முதல்வர் ஸ்டாலினின் தந்தையை அப்பா என்றனர். இப்போது ஸ்டாலினை அப்பா என்கின்றனர். குழப்பமாக உள்ளது.- சீனிவாசன், முன்னாள் அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajarajan
பிப் 24, 2025 09:57

இப்போ எதுக்கு இந்த வீண் வீராப்பு கருத்து. எப்படி தடுக்க முடியும் ? தடுத்து தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் உங்களுக்கு அடுத்த வேளை சோறு கிடைக்குமா என்று. அட்டக்கத்தி வீரன் பேட்டி.


Jay
பிப் 24, 2025 09:46

உண்மையில் இந்த இந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்துவது திமுக மட்டுமே. அஇஅதிமுக என்பதில் அனைத்து இந்திய என்று வந்துவிடுகிறது.


Sampath Kumar
பிப் 24, 2025 09:41

முதல உங்க கட்சி ஏங்கே இருக்கு என்று தேடி பாருங்க சிறீனிவாசன் அப்புறம் 3 வைத்த 4 வைத்து மொழி பற்றி paesalalm


sankaranarayanan
பிப் 24, 2025 07:53

இவருக்கு முன்பே மாம்பழத்திற்கும் ஆப்பிளுக்குமே சின்னம் வித்தியாசம் தெரியாதேத நம்பி ஒரு கட்சியும் இருக்குதே நாட்டில் மக்களின் முட்டாள்தனம்தான் காரணம்


புதிய வீடியோ