உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்' என்று தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்துக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகள் மட்டுமே உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சுற்றுலா செல்வோருக்கு பேருதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nb
மார் 15, 2025 06:29

பரந்தூர்ல கட்டி தள்ளிடானுங்க


Easwar Kamal
மார் 14, 2025 18:59

தமிழகத்தில் எங்கு இடம் இருக்குது மும்பை போல கடலில் ஒரு செயற்கை நகரம் உருவாக்கி அதில் விமான நிலையம் அமைக்கலாம்.


Gowtham Saminathan
மார் 14, 2025 18:31

ஒரு வருடம் தானே இருக்கு... அடிச்சு விடு உன் பாட்டுக்கு


Sampath Kumar
மார் 14, 2025 15:53

நல்ல திட்டம் வரவேற்கின்றோம்


Loganathan Kuttuva
மார் 14, 2025 14:58

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரத்தில் விமான நிலையம் இருந்தது .


T Jayakumar
மார் 14, 2025 13:47

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓசூர் விமான நிலையம் என்னாச்சு. அடுத்து ராமேஸ்வரம். சும்மா அடிச்சு விடு


ஆரூர் ரங்
மார் 14, 2025 11:44

திருப்பூர் திராவிட துறைமுகத் திட்டம் என்னாயிற்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை